தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு திருச்சி கலையரங்கம் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோபி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு சென்னை கடலூர் ஈரோடு அரியலூர் பெரம்பலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி ஆய்வக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மாநாட்டு அரங்கின் வெளியே பள்ளி ஆய்வக உதவியாளர் ஒருவர் திடிரென்று வலிப்பு காரணமாக மயங்கி நிலையில் தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து தலைமை காவலர் ஜீவானந்தம் என்பவர் உடனடியாக தனது வாகனத்தின் சாவியை அவரது கையில் கொடுத்து அவருக்கு முதலுதவி அளித்தார் மேலும் அங்கிருந்த பெண் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் மற்றும் கலையரங்க பெண் மேலாளர் ஆகியோர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவலர் ஜீவானந்தம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து. அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை கண்ட பள்ளி ஆய்வக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முதலுதவி அளித்த தலைமை காவலர் மற்றும் பெண்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவித்தனர்.