அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவமதித்து பேசினார். இதனை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் அதன் ஒரு பகுதியாக விச் அருணாசலம் மன்றம் அருகே தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளர் லெனின் பிரசாத் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் சிங்காரத்தோப்பு அருகே செல்வப் பெருந்தகை அவர்களின் படத்தை அவ மதிப்பு செய்து போராட்டம் நடத்தினர் அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து அருணாச்சலம் மன்றம் வழியாக வேனில் அழைத்துச் சென்றபோது காங்கிரஸ் அலுவலகத்தில் அமைதியான முறையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியினரை பார்த்து தகாத வார்த்தைகள் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதனைக் கண்ட காங்கிரஸார் பதிலுக்கு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வின்போது திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் விச்சு என்கிற லெனின் பிரசாத் மாவட்ட பொருளாளர் முரளி, துணை தலைவர் சக்கரபாணி, வக்கீல் சரவணன், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் கோட்ட தலைவர் பகதுர்ஷா, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், ஜி எம் ஜி புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் கோட்ட பொறுப்பாளர் ராகவேந்திரன், பஜார் மொய்தீன், மீனவர் அணி மாநில பொதுசெயலாளர் தனபால், நாச்சிக்குறிச்சி அருண், மகிளா காங்கிரஸ் அஞ்சு, மும்தாஜ், சுல்தான்பாஷா, ரபிக உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.