அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அதிமுக கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மற்றும் அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.