அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9 ரயில் நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்ரின் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் .திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மண்டலர் ரயில்வே மேலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.