அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கோரிக்கைகளாக தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க கோரியும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்க கோரியும், பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறைவேற்று, நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரியும், ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58-ஆக மாற்றக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் நிறைவேற்ற கோரியும், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உத்தரவாதப்படுத்த கோரியும், சிறு மற்றும் குறுந் தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு வினர் பேரணியாக வந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.