திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார் முன்னதாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கூட்ட அரங்கில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் ஆவின் நிறுவனத்தின் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வாழ்த்துரை வழங்குவதற்காக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசும்போது திடீரென பவர் கட் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் தமிழகத்தில் கரண்ட் இல்லை என்பது சமீப காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது அமைச்சரின் கவனத்திற்கு சென்று இருக்கும் என நினைக்கிறேன் தற்போது கரண்ட் இல்லை என்பது மக்களிடையே பேசும் பொருளாக சமீபகாலமாக இருந்து வருகிறது.
உடனடியாக தமிழக முதல்வர் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அரசு விழா மேடையில் நாசுக்காக மின்வெட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி அமைச்சரிடம் வலியுறுத்தி கூறிய திருநாவுக்கரசு எம்பி..