திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதி மேட்டுத் தெருவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு தீர்த்த தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலின் 42 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 12ஆம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அன்று மாலை திருவிளக்கு பூஜை உடன் நயினார் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 14 ஆம் தேதி திருக்காவேரி தென்கரை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பக்தர்கள் திருமஞ்சனம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலமானது குடமுருட்டி பாலம் வழியாக சிந்தாமணி அண்ணா சிலை ரவுண்டானம், ஆண்டாள் வீதி, பாபு ரோடு வழியாக மலைக்கோட்டை ஒட்டியுள்ள அருள்மிகு தீர்த்த தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலை சுற்றி கிரிவலமாக வந்து கோவிலை சென்று அடைந்தது. இதில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக தீர்த்த குடம், பால்குடம் மற்றும் அழகு குத்தி ஊர்வலமாக வந்தனர். மேலும் நாளை 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அருள்மிகு தீர்த்த தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் கிடா வெட்டு பூஜையும் மாபெரும் அன்னதான நிகழ்வும் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.