திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ஆம் தேதி இந்திரா நகர் தலைவர் தர்மகர்த்தா கண்ணன் தலைமையில் நாட்டாமை ராமலிங்க முன்னிலையில் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் தென் வடலான திருகோரையாற்றில் காரகம் அருள்பாலித்து விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி இந்திரா நகர் உதவி நாட்டாமை ராசர் கோவில் பூசாரி கந்தையன் ஆகியோர் முன்னிலையில் கோரையாற்றிலிருந்து ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் பறவைக்காவடி, பால்குடம் அக்னி சட்டி, அலகு காவடி, சிலாககுத்து எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இன்று இந்திரா நகர் ஊர் பொதுமக்கள் சார்பாக மாபெரும் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த அன்னதானத்தில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.