திருச்சி காஜா பேட்டை பசுமடம் எதிரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் மற்றும் 50 ஆண்டு திருக்கரக உற்சவ விழா இன்று நடைபெற்றது.
கடந்த மாதம் 17ஆம் தேதி பூச்செரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி இரண்டாம் தேதி மாரியம்மனின் வீதி உலா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சந்தன காப்பா அலங்காரம் அம்மன் பல்லாக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோயில் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.