தமிழக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் – தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் இன்று நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல் நடைபெற்றது திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரு மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர செயலாளரும், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மனுக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினர்.
பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையில், பட்டதாரி ஆசிரியர்களை முதல்நிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பதவி உயர்வு வழங்கி, காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுடன் கலந்துபேசி *பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்*
தமிழக அரசு பள்ளிகளில், மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் ஆய்வு நடத்துவதன் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு… தமிழ்நாட்டு பள்ளிகளை ஆய்வு செய்யும் மத்திய அமைச்சர், மாநில மக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் புரிந்து கொண்டு, கல்வி மேம்பாட்டிற்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கினால் அது நன்றாக இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்தார்.