திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கடந்த 11 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அல்லல் பட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கையை இதுவரை தமிழக முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்த ஒரு தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் இன்னொரு நியமன தேர்வு ஆணை பின்பற்றப்படுகிறது தற்போதைய தமிழக முதல்வர் கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசாணை எண் 149 ஐ அர்த்தமற்ற அரசாணை என்று வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் வரும் 2021 தேர்தல் அறிக்கையில் தங்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்தார்.

 மேலும் அரசாணை எண் 149 மறு நியமன போட்டி தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும் திமுக தேர்தல் அறிக்கை 157 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தும் நாங்கள் இன்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும் தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எங்களுக்கு இன்னும் விடியல் பிறக்கவில்லை என்றும் மேலும் நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்று சொல்லப்பட்ட உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திலும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2000 மனுக்களை அனுப்பி உள்ளோம் நாங்கள் மனு கொடுத்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்ட பிறகும் எங்களுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை மேலும் முறைச்சார பணியாளராக முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர்கள் எங்களை குறைந்தபட்ச தொகுப்பு ஊதியம் வழங்கி பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக அனைத்து மண்டலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி இறுதியாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்