திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற ஆடுகளை சிசிடிவி கேமரா உதவியோடு ஆடு திருடிய 10 ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3-பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய ஆடுகளையும், ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பாபிள்ளை மகன் பரமசிவம் (57). ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மதியம் 3 மணிக்கு ஆடுகளை அங்கேயே மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்துள்ளார் பரமசிவம். அங்கு வந்து பார்த்த போது தனது ஆடுகளில் இரண்டு ஆடுகளை காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமசிவம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வை ஆய்வு செய்த போது சிசிடிவி கேமராவில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ஆடுகளை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.
இதனை வைத்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, திருட்டில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் மூவர் வந்தவர்களை பிடித்து விசாரித்த போது, ஆடு திருடியதனை ஒப்புக் கொண்டனர்.ஆடு திருடிய சமயபுரம் டோல்கேட் பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டீன்ராஜ் மகன் ஹரிஹரன் (21). கூத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சமயபுரம் நெ.1 டோல்கேட் திருவள்ளுவர் அவின்யு பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறான்.
மூவர் மீது திருட்டு வழக்கு பதிந்து, கைது செய்தும், அவர்கள் திருடிச் சென்ற ஆடுகளை கூத்தூர் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வைத்திருந்த இரண்டு ஆடுகளையும், திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தினையும் சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ஆடுகளை உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.