திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கையை வலியுறுத்தி பேசுகையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் இதுவரை சுமார் 41 பேர் தற்கொலை செய்து வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்காத கவர்னர் தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுவதை கண்டித்தும்
உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரியும் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகஉயர்த்தி வழங்கிட கோரியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க கோரியும் தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் காட்டூர் செல்லும் பயணிகளை ஏற்றி இறக்க கோரியும் காட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த கோரியும்
காமராஜர் நகர் பகுதி தெருக்கள் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாத ஆர் என் ரவியை கண்டித்தும் ஆளுநரை தடை செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் கூனி மேடு முஸ்தபா, மாவட்ட செயலாளர் முகமது இக்பால், மாவட்டத் தலைவர் அரப் ஜான், மாவட்ட இளைஞரணி தலைவர் சபீக் மற்றும் முகமது சாதிக், சாதிக் ஜாபர், ஹசன் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.