தஞ்சை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு என் இரு சால்வை அணிவித்து வரவேற்றார் அதனைத் தொடர்ந்து திருச்சி மேயர் அன்பழகன் தஞ்சாவூர் மேயர் இராமநாதன் மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பாளித்தனர் அதனைத் தொடர்ந்து காவல்துறையின் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அமலாக்கத்துறை சோதனையால் திமுக அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் பயந்து இருக்கிறார்கள், என நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார், என்ற கேள்விக்கு?? யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக தான் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். கலைஞராக இருந்தாலும் தற்போதைய முதலமைச்சராக இருந்தாலும் நாங்கள் யாரைப் பார்த்தும் அஞ்ச மாட்டோம்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைந்துக்கொண்டே வருகிறது, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுமா?? திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரிலிருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை முதலமைச்சர் பெற்று தருவார். தமிழ்நாடு ஆளுநர் தற்போது டெல்லி பயணம் சென்றுள்ளார், இதை பற்றி உங்களுடைய கருத்து?? ஆளுநருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் அவர் அவ்வப்போது டெல்லி சென்று வருகிறார்.