இந்த ஆண்ட தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு பிறகு ஆளுநர் உரை வாசிக்க துவங்கியபோது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவரது உரையை படிக்காமல் சட்டசபையை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினார். அதற்கு அவர் கூறிய விளக்கம்தான் எவராலும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.
மேலும் இது போன்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தும், ஆளுநர் உரையை அவர் புறக்கணிக்கும் செயல் என்பது தழிகத்தையும், தமிழக மக்களையும், தமிழக அரசையும் அவமதிக்கும் செயலாகும் எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் இன்று காலை திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் அவரது உருவப்படத்தை வைத்து அவரை தமிழகத்தில் இருந்து வெளியேறச் சொல்லி கண்டன முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு ம.க.இ.க, மாநிலப் பொதுச் செயலாளர் கோவன், ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, பு.ஜ.தொ.மு மாவட்டச் இணைச் செயலாளர் மணலிதாஸ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர், செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஆதி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மற்றும் ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.