திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.. இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த பறவைகள் பூங்காவானது 4.02 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி பறவைகள் பூங்காவில் 60.000 சதுர அடி பரப்பளவில் ஐந்திணை என்றழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய 5 வகை நில அமைப்புகளை விவரிக்கும் வகையில் அந்த நிலப்பகுதிகளுக்கான அடையாளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும். வகையிலா வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான நூற்றுக்கணக்கான பறவைகள் விடப்பட்டுள்ளன. இந்த பகுதிக்குச் செல்லும் பார்வையாளர்களின் மீது பறவைகள் அமர்ந்து அவர்களிடம் கெஞ்சும் அழகு காண இயலாததாகும். மேலும் இங்கு பார்வையாளர்கள் பறவைகளுக்கான பிரத்யேக உணவினை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பறவைகள் தங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான அழகிய கோழியினங்கள். நெருப்புக்கோழிகள், ஈமுக்கள் தனியாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பல வகை வாத்துகள், பலவகை கிளிவகைகள், பலவகை குருவிகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. บด வகையான முயல்கள் தனியாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. திருச்சி பறவை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கோய் மீன் குளம் (KOI FISH POND) குழந்தைகள் இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.