இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தேசியக்கொடி பேரணி இன்று நடைபெற்றது. இந்த தேசியக் கொடி பேரணிக்கு பாஜக திருச்சி மாநகர் மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமை தாங்கினார். பேரணியை பாஜக மாநில இணை பொருளாளர் Dr.சிவசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணையானது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் சிறுவர் சிறுமியர் சிலம்பம் சுற்றியும், பாரத மாதா வேடம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர். மேலும் நிர்வாகிகள் காளீஸ்வரன், மகளிர் அணி நிர்வாகி புவனேஸ்வரி, முரளி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாரத ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கைகளில் மூவர்ண தேசிய கொடியை ஏந்தி பேரணியாக வந்தனர்.