இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு கோகோ ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் ஶ்ரீரங்கம் கிரீன் கிராஸ் மைதானத்தில் மூவர்ண தேசியக் கொடியை கையில் ஏந்தி 79 நிமிடங்கள் தொடர் ஸ்கேட்டிங் மாரத்தான் செய்து ஸ்கேட்டிங் வீரர் வீராங்கனைகள் மூன்று உலக சாதனை படைத்தனர்.
இதில் 79 மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் ஸ்கேட்டிங் மாரத்தானில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் ஊக்கம் அளித்தனர். மேலும் இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கோகோ ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பொதுச் செயலாளர் பூஞ்சோலை ஆகியோர் செய்திருந்தனர்.