அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக பாரத தேசத்தில் நடக்கக்கூடிய தொடர் பாலியல் படுகொலை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா ஆர் ஜி கார் மருத்துவமனையில் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அந்த குற்ற செயல் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க கோரியும்,, அதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிரான அவசர சட்ட திருத்தத்தின்படி கற்பழிப்பு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் விதிக்கப்படும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்கிற அச்சட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது மேலும் இது போன்ற பாலியல் கொலைகள் மற்றும் கொடூர குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது சபிக் தலைமை தாங்கினார். தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் சாதிக் பாஷா பாவா, மாநிலத் தலைவர் காஜா முஹையத்தீன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட பொருளாளர் ஜனுல்லா மகுது துணை செயலாளர் புகழ் இளைஞர் அணி செயலாளர் உசேன் ஷெரீப் வர்த்தக அணி செயலாளர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி அமீனா பீவி ராஷிதா துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில் மற்றும் பாலக்கரை பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்