திருச்சி சத்திரப்பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறுகையில் :- திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அது இன்று திருச்சியில் துவங்கி உள்ளோம். வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் என முதலமைச்சர் கூறியுள்ளார் அதற்கு ஏற்ப திமுக ஆட்சியின் தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். தேர்தல் களத்தில் திமுக தான் முதன்மையான இடத்தில் இருக்கிறது எதிர் அணியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் நீடித்து வருகிறது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உற்சாகமான தேர்தல் களத்தில் முதல் ஆளாக இறங்கியுள்ளார் அவருக்கும் துணை முதலமைச்சர் களத்தில் வலு சேர்க்கும் வகையில் எங்களுடைய பணி அமையும். எதிர் அணியினரை துவம்சம் செய்யும் அளவிற்கு திமுக ஐ டிவி லிங்க் நிச்சயமாக செயல்படும். பாஜக வார் ரூமில் வேலை செய்பவர்கள் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள். ஆனால் திமுகவில் ஐடிவிங்கில் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து வேலை செய்யக்கூடியவர்கள் கொள்கை உள்ளுணர்வோடு பணியாற்றக் கூடியவர்கள். திமுகவினரின் செயல்பாடு முதலமைச்சரின் செயல்பாடு துணை முதலமைச்சர் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே எதிர் அணியினர் வைக்கும் பொய்ப் பிரச்சாரங்கள் பொடிப்பொடி ஆகும்.எதிர் அணியினர் வைக்கும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்து கொண்டு சென்றால் நேரம் தான் விரயம் ஆகும் சரியான குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டும் அவர்களுக்கு வாதங்களை சரியான முறையில் எடுத்து வைக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்களில் நிச்சயமாக நாங்கள் தரமான முறையில் கண்ணியமான முறையில் பதில் அளிப்போம். மக்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்காக குறிப்பிட்ட அளவு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம் பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு இல்லாததால் தமிழக அரசின் சொந்த பணத்தை மக்களுக்காக செலவழித்து மாற்ற திட்டங்களுக்கு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்கினாலும் அதனை திறம்பட செயல்படுத்தி மக்கள் திட்டங்களை முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார் அதனால் தான் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

பத்தாண்டுகள் தமிழகத்தை அதிமுக அரசு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு அதனை மிக வேகமாக முன்னோக்கி எடுத்து வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்பு வரை தமிழகத்தின் மீது எதிர்மறை எண்ணம் தான் உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமான பணிகளை முதலமைச்சர் செய்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் அந்தத் திட்டங்களை உலக நாடுகள் இன்று பின்பற்ற தொடங்கியுள்ளன.அதனால் இன்று தமிழகத்தின் மீது நேர்மறை எண்ணம் வந்துள்ளது. இந்தியாவில் வளர்ச்சி என்றாலே தமிழகம் தான் என்கிற நிலையை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார். எல்லா நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. களத்தில் கொள்கை கூட்டமாக, தமிழக மக்களின் கனவுகளுக்கு சிறகுகளை கொடுத்து மக்கள் இயக்கமாக இருப்பது திமுக தான். திமுக கம்பீரமாக மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இருந்து கொண்டே தான் இருக்கும் அதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் பலர் புதிதாக வந்து கொண்டே தான் இருப்பார்கள். பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்திய பொழுது அவர் மரணிக்க வேண்டும் என அங்கிருக்கும் சீமான்கள் எல்லாம் பூஜை செய்தார்கள் ஆனால் பெரியார் 94 வயது வரை இருந்து திராவிட கொள்கையை தமிழகம் முழுவதும் பரப்பினார். அந்த கொள்கை இன்று வரை முதலமைச்சர் மூலமாக மக்களுக்கு சென்று கொண்டே தான் இருக்கிறது அதே போல, தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என பலர் வந்து கொண்டும் போய் கொண்டும் தான் இருப்பார்கள். ஒருபோதும் அவர்களால் திமுகவை வீழ்த்த முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என வருபவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். திமுக கொள்கை கூட்டம் அதை ஒரு போதும் யாராலும் வீழ்த்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *