இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் 51 வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் இதில் 40 நபர்களுக்கு வேட்டி , சேலை, அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதே போல 30 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர். மேலும் வருங்காலத்தில் வறுமை இல்லாத வாழ்வாதாரம் கொண்டு வருவோம் என்றும்
மேலும் தன்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதாக கூறினார் இதில் மாற்றுத்திறனாளி நிறுவன மாநில தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.