சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் அஞ்சுகம் தலைமை விதித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பம் ,பல்கீஸ் பானு, வனிதா, இன்னசென்ட் விமலா மேரி, ரஷ்யா பேகம், ராஜேஸ்வரி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் சுமதி வரவேற்புரை ஆற்றினார். மாதர் குலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் கிளாரா ஜெட்கின் பற்றி மாவட்டத் தலைவர் பார்வதி, பாப்பா உமாநாத் குறித்து மாவட்டத் துணைத் தலைவர் ஆயிஷா, ஜனகம் இஸ்மாயில் பற்றி மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரி, சுகுணா ராஜகோபால் குறித்து ஒருங்கிணைப்பாளர் மருதாம்பாள் ஆகியோர் உரையாற்றினர்.
மகளிர் தின சிறப்புரையாக சமூகவியல் ஆய்வாளரும், பாலின சமத்துவ பயிற்றுனருமான காயத்ரி எழுச்சி உரையாற்றினார். மாணவிகளின் கண்கவர் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, மற்றும் கவிதைகளை தொகுத்து வழங்கினர்.