இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி,தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டம் சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் தான் அதற்கான நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வந்த நிலையில் அதனை எதிர்த்து திமுகவினர் தமிழக முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில்
திமுக மாணவரணி,தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டமைப்பு சார்பில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர்கள் வைரமணி,மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், நாகராஜன், மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்…