மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் ஏசியன் டேலண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் 2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது 2025 ம் ஆண்டுக்கானகுறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் விஸ்வா நாராயன் செந்தில்குமார் ஆகியோர் தயாரிப்பில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்பட இயக்குனரும் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான திருச்சியை சேர்ந்த ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் இயக்கத்தில் உருவான பெண் குழந்தை தொழிலாளர் மற்றும் பெண் குழந்தை கல்வி குறித்து எடுக்கப்பட்ட

 கனவு தமிழ் குறும்படம் 2025 ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருது மற்றும் சிறந்த குறும்படம் என 2 பிரிவுகளில் விருதுகளை வென்றது விருது வழங்கும் விழா அவுரங்காபாத்தில் உள்ள பஹனுதாஸ் சவான் மெமோரியல் ஹாலில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது இவ்விருது வழங்கும் விழா குழுவின் நடுவர்களாக மஹாராஷ்டிரா மாநில திரைபடத்துறையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் எடிட்டர் சன்கதீப் சக்கரபர்த்தி திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ஜனாஸ் ஜவான் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் சஞ்சய் சன்வால் திரைப்பட இயக்குனர் எடிட்டர் ரூனா லைலா நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கேன்ஸ் பில்ம் வெஸ்டிவெல் விருது வழங்கும் குழுவை சேர்ந்த சர்வதேச நடுவர் எழுத்தாளர் ஜசி டாப் நெதர்லாந்து நாட்டில் வெளிவரும் ஏ3 பத்திரிகையின் நிர்வாகியும் எழுத்தாளரும் கலை இயக்குனருமான ஆட்ரி வான் டி இரான் நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர் எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் மெய்சாம் அப்பாஸ்

உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து படங்களை பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு தேர்வு செய்து விருதுகளை வழங்கினர். இப்போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த படங்கள் பல்வேறு பிரிவுகளில் (குறும்படங்கள் திரைப்படங்கள் பாடல்கள்) கலந்து கொண்டன இதிலிருந்து பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு 251 படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது தேசிய அளவில் தமிழ்நாடு கேரளா ஒடிசா ஆந்திரா குஜராத் மஹாராஷ்டிரா டெல்லி பஞ்சாப் கர்நாடக மேற்கு வங்காளம் அசாம் உள்ளிட்ட

 மாநிலங்களில் இருந்தும் ஸ்பெயின் பிரான்ஸ் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அமெரிக்கா ரசியா கொரியா பிலிப்பைன்ஸ் மலேசிய இரான் நெதர்லாந்து கனடா ஸ்பெயின் இலங்கை சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருது மற்றும் சிறந்த குறும்படத்திர்கான விருது 2பிரிவுகளில் 2 விருதுகளை திருச்சியை சேர்ந்த ஆர். ஏ. தாமஸ் அவர்கள் இயக்கத்தில் உருவான கனவு குறும்படம் பெற்றது விருதுகளை படத்தின் இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் மற்றும் மைக்கேல் ஆரோன் விக்னேஷ் இயன் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பட குழுவினர் பெற்று கொண்டார்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *