சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா வயது 21 நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலையில் பலத்த காயமடைந்ததில் அ இளம் பெண் சினேகா இறந்தது தெரிய வந்தது. விசாரணையில் சினேகாவுக்கும், இலுப்பகுடி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர் சினேகா அக்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதால் அக்கா திருமணம் முடிந்த பிறகு உங்கள் திருமணம் நடத்தி வைக்கிறோம் என சினேகா வீட்டு தரப்பில் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி நேரடியாக வீட்டுக்கே வந்து கண்ணன் தகராறு செய்ததாகவும் இதில் ஸ்னேகா தாத்தாவை கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதிலிருந்து சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு போனில் அழைத்துள்ளார் அந்த சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்டை எடுத்துக்கொண்டு சினேகா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மாத்தூர்ரேஷன் கடைக்கு வந்துள்ளதாகவும்
அப்பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் வண்டியில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலை தலையில் ஓங்கி அடித்ததாகவும் அந்த அடித்ததில் அலற சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரும்பொழுது ஆள் வருவதை கண்ட கண்ணன் வண்டி எடுத்துக்கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திலே சினேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்