தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்தி வழங்ககோரியும், உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு உயிர்போகும் நிலையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கொலை செய்ய முயன்ற சாதிவெறியர்களை கண்டித்தும், திருச்சி மாவட்டம் முழுவதும் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு போடக் கோரியும்,
முஸ்லீம்களையும் கிருஸ்தவர்களையும் சாத்தானின் குழந்தைகள் எனக் கூறிய சீமானை கண்டித்தும், இஸ்லாமியர்களுக்கு ஆட்டோ கடன் வழங்ககோரியும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுக்கின்ற தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜித், மாவட்ட செயலாளர் ஜாகீர்கான், மாவட்ட துணைசெயலாளர் முபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைமை கழக செயலாளர் தர்கா சாதிக்கான், மாநில பொருளாளர் நஜிருதீன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னா, மாவட்ட இளைஞரணி தலைவர் சபீக், மாவட்ட பொருளாளர் நத்தர் அலி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சாதிக் முகமது உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா நன்றி கூறினார்.