டெக்காத்லன் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வலியுறுத்தி “நம்ம திருச்சி ஓட்டம்” என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆர்டிஓ அருள், ஜெயம் பில்டர்ஸ் உரிமையாளர் ஆனந்த், கவுன்சிலர் காஜாமலை விஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது, மன்னார் புரம், காஜா மலை, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக மீண்டும் கல்லூரியை வந்து அடைந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கு 2 கிமீ தூரமும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிமீ தூர ஓட்டம் என இருபிரிவுகளில் நடத்தப்பட்டது.
மேலும் நிகழ் ஈவன்ட் பவுண்டர் ராஜசேகர் மற்றும் கோ பவுண்டர் பவித்ரா ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற மாணவ மாணவிகள் பெரியவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற தங்களது குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து ஓடியதை காணமுடிந்தது, இது பெற்றோர்களும் பிட்னஸ் ஆக இருக்க வேண்டும் என குழந்தைகள் அறிவுறுத்தியது போல அமைந்தது.