நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் உதகை 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மலர் கண்காட்சியில் பல்வேறு வகையிலான மலர்கள் இடம்பெற்றுள்ளன. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
இறுதி நாளான இன்று பசுமை பெற்ற திருநங்கைகள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மூலம் உதகை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று கடந்த பத்து நாட்களாக சிறந்த முறையில் கைவினைப் பொருட்கள் ஸ்டால் அமைத்த திருச்சியை சேர்ந்த சேப் அமைப்பின் இயக்குனர் கஜோல் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.