பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக பில்லர்ஸ் & கே.என்.ராமஜெயம் அசோசியேசன் சார்பில், திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத்தெருவில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. 15 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல், நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வக்கீல் சரவணன், காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் பஜார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் திவாகர், குணா, துரையரசன், பிரகாஷ், அருண், கலைக்கோவன், கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.