உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை இன்று நடத்தியது. மேலும் ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண் பார்வை தினத்தன்று மக்களுக்கு கண்ணலம் பற்றிய செய்திகளை வழங்கி வருகிறது.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக பார்வை தினத்தை ஒட்டி கண்ணலம் பற்றிய சில முக்கிய செய்திகளையும் ஒரு நோயை குணப்படுத்துவதை காட்டிலும் அதனை எவ்வாறு வராமல் தடுப்பது ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்துவது போன்ற சில முக்கிய செய்திகளையும் இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த விழிப்புணர்வு வாக்கத்தானை இயக்குனர் டாக்டர் பிரதீபா டிஸ்ட்ரிக்ட் டிரைனர் செந்தில் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர் டாக்டர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் சரவணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் சேர் பர்சன் சுபாபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாக்கத்தான நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண் பார்வை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.