ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.
உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் உலக சுற்றுசூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இன்று ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் மண்டல மேலாளர் கிரேஸியஸ் வழங்கினார். அருகில் கிளை மேலாளர் ஆனந்த், துணை மேலாளர் அனுப் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை ஊழியர்கள் உடன் இருந்தனர்.