சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அடிப்படையானது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். வளர்ச்சி, தொழில்நுட்பம் எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் இதனால் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை பெரிதும் பாதித்து வருகிறது.
வளர்ச்சி மனிதனுக்கு உயர்வை தருவதோடு அதன் பக்கவிளைவுகளையும் சந்திக்க வைக்கும். அதனால் தான் மனிதர்களை சுற்றுசூழலையும் கருத்தில் கொண்டு நடக்க வேண்டும் என்பதை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி திருச்சி காஜாமலை ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை 5வது பட்டாலியனில் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கமெண்டிங் ஆபீஸர் அஜய் ஜோதி ஷர்மா மற்றும் அதிகாரிகள் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை காவலர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.