உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது . இந்த முகாமை மருத்துவர் அணுக்கிரக பிரசன்னா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் மருத்துவர்கள் ஷாலினி மற்றும் சாய் தாஜேஸ்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது இந்த முகாமில் கண் பார்வை பரிசோதனை, ஆரம்பக்கட்ட கண் பரிசோதனை, கண் நீர் அழுத்த பரிசோதனை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்தியேக கண் விழித்திரை பரிசோதிக்கும் கருவி மூலம் சர்க்கரை நோயாளிகள் கண்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் சர்க்கரை நோயாளிகளுக்கு அனுமதி இலவசம் மேலும் இந்த முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை நகல் ஆதார் கார்டு நகல் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை நகல்களை கொண்டு வந்து பரிசோதனை மேற்கொள்ளலாம் என மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த முகாமில் ஆயிரக்கணக்கான சக்கரை நோயாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.