உலக போதை ஒழிப்பு தினம் ஜூன் 26 அன்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஆத்மா மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் மருத்துவர் ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மூத்த மனநல மருத்துவர் ராஜா ராம் முன்னிலையில் டாக்டர்கள் மோகன் பிரியா மற்றும் செந்தில்குமார் இணைந்து விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தனர்.
மற்றும் திரைப்பட நடிகை கோகிலா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தார் மற்றும் பல்வேறு அமைப்புகள் திருச்சி ஜேசிஐ மற்றும் ராயல் லயன்ஸ் கிளப் திருச்சி மற்றும் ரீச் ஆர்கனைசேஷன் மற்றும் திருச்சி பாயிண்ட் அகாடமி மற்றும் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் கண்மலை தொண்டு நிறுவனம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்வேறு சமூக பணியாளர்கள் ஆகியோர் பெருவாரியாக கலந்து கொண்டு
ரயில் பயணிகளுக்கு போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த துண்டு பிரசுரம் மூலமாக போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது இன் நிகழ்ச்சியை ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் ஒருங்கிணைத்தார்.