டிசம்பர் 03-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான “வண்ணத்திரன் கண்காட்சி” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஓவியப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

அதில் செவித்திறன் குறைபாடுடையோர், இயக்கத்திறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், புறவுலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறைபாடுடையோர் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் ஓவிய திறமையை வெளிப்படுத்தினர். இந்த ஓவிய போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு

சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திலிருந்து மாவட்ட வாரியாக முதல் பரிசு ரூ.1000/- இரண்டாம் பரிசு ரூ.500/- மூன்றாம் பரிசு ரூ.250/- வழங்கப்பட்டது. இந்த ஓவிய போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர்.
