உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாற்று திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், அரசு அலுவலர்கள் ஆகியோருடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை எடுத்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நடன கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு பாடல் மற்றும் நடனம் ஆடியபடி சென்றனர். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக மேஜர் சரவணன் நினைவு தூண் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழந்தைகள் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.