மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,
அதில், தேசிய பாதுகாப்பு சட்டம்,UAPA போன்ற சட்டங்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசை விமர்சனம் செய்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.பழங்குடி இன மக்களுக்காக போராடிய ஸ்டான் சுவாமி UAPA சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் பிணைக்கிடைக்காததால் உயிரிழந்தார். மேலும் பலர் அந்த சட்டங்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்களை ஒடுக்க ஒன்றிய அரசு அந்த சட்டங்களை பயன்படுத்தி வருகிறது. எனவே அந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய சுதந்திரம் பறி போய் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் அன்று திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தை மக்கள் அதிகாரத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.