தமிழகத்தில் கொரோணா 2 வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து தமிழக அரசு கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவித்து முழு ஊரடங்கும் சில தளர்வுகளுடன் ஊரடங்கும் தமிழகத்தில் அமல்டுத்தப்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் (கடந்த மே மாதம் 11-05-21 முதல் ஜீன் மாதம் 12 -06-21 வரை) திருச்சியில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல தரப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்கள் சாலை ஓரோங்களில் வசிப்பவர்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் மக்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டது.
குறிப்பாக உணவு மற்றும் உணவு பொருட்கள் கொரோணா குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை மாற்றம் அமைப்பு நல்உள்ளங்கள் அறக்கட்டளை தன்னார்வமாற்றுத்திறனாளி சங்கம், தாய் நேசம் அறக்கட்டளை தினசேவை அறக்கட்டளை சார்ந்த தன்னார்வலர்கள் இணைந்து செய்தனர்.
இக்களபணியை மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நல்உள்ளங்கள் அறக்கட்டளை நிர்வாகி பேராசிரியர் சையது முகமது தன்னார்வமாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம் தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியாராக்கினி, தினசேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி தன்னார்வலர்கள் அல்லிகொடி, கலைவாணி, ஜெயகுமார் அவ்வர்டு மைக்கேல், கிருபா சங்கர் கிளன் ஜோசப்,மணிவேல் தினேஷ்,ரெங்கராஜ், பார்த்திபன்,தினகரன்நவீன்குமார் ஶ்ரீதர், ஜான்துரை,தேவராஜன்,சரவணன், கண்ணன்,ராஜேஷ், பாண்டியன்,ஆரோன் அலக்சாண்டர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் களபணிகளை செய்தனர்.
மேலும் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இயங்கும் மூத்த குடிமக்கள் முதியவர்களுக்கான தொலைபேசி உதவி மையம் மற்றும் உணவு வங்கிக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்
மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனைக்கு நோயாளிகளை தன்னார்வலர்கள் அழைத்து செல்லுதல் மருந்து மற்றும் தேவையான பொருட்களை தன்னார்வலர்கள் வீட்டிற்கு சென்று வாங்கி தரும் பணி வாகனத்தில் கொரோணா விழிப்புணர்வு பணி மாலை வேலைகளில் வழங்கப்பட்ட உளுந்த கஞ்சி, ராகி கஞ்சி, தேநீர் குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட. ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாற்றம் அமைப்பின். தன்னார்வலரகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு எடுத்து சென்று ஏழ்மையில் வறுமையில் உள்ள மக்களுக்கு வழங்கும் பணியையும் மேற்கொண்டனர் இக்களப்பணியில் பலருக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை தந்து உதவிகள் செய்து வருகின்றனர்
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation