திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிபட்டியில் நடந்து வரும் தனியார் (ஜியோ) செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திடக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராமமக்கள் இணைந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிபட்டி தெற்கு தெருவில் தனியார் செல்போன் நிறு வனமான (ஜியோ நிறுவனம்) செல்போன் டவர் அமைக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு செல்போன் டவர் அமைக்கும் இடம் குடியிருப்பு பகுதி நிறைந்ததாகவும் மிக அருகில் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது அதனால் பொது மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் ஒதுக்குப்புறமான வேறு இடத்தில் அந்த தனியார் செல் நிறுவனம் செல்போன் டவரை அமைக்க வேண்டும் என்று கோரி
அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு இது சம்பந்தமாக திருவெறும்பூர் தாசில்தார், திருச்சி ஆர்டிஓ, திருச்சி கலெக்டர்,தொகுதி எம்எல்ஏ வும்தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பலருக்கும் தங்களது கோரிக்கை மனுவையும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்
திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் அப்பகுதியில் ஜியோ டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டவர் அமைக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றால் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடராஜன் தெரிவித்தார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்போன் டவரை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவதற்கும் அஞ்சமாட்டோம் என்றார். இந்த போராட்டத்தில் கிழக்குறிச்சி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மார்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.