மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் தலைமையில் மகளிர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
அதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மற்றும் பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.