பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சி திருவெறும்பூர் தொகுதி கிருஷ்ண சமுத்திரம் பகுதி எழில் நகரில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.. குடியிருப்புகள் அதிகம் நுழைந்த இந்த பகுதியில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் குழந்தைகள் பெரியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்க கூடாது என வலியுறுத்தி பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் திருவரம்பூர் மண்டல மகளிர் அணி தலைவி சுஜாதா, பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.