திருச்சி தமிழ் சங்கத்தில் உலக தாய்மொழி தின விழாவை முன்னிட்டு எழு தமிழ் இயக்கத்தின் தலைவர்பட்டைய தணிக்கையர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழா நிகழ்ச்யில்தமிழ் சங்க நிர்வாகிகள் உதயகுமார் கோவிந்தசாமி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் லால்குடி முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்சியில் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தாய் மொழியின் பெருமையைப் பற்றி சிறப்புரை ஆற்றினார், அதைத்தொடர்ந்து திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தாய் மொழியின் சிறப்பு தாய் மொழியின் பண்பாடுகள் தாய் மொழியின் வரலாற்று சிறப்புகள்தாய்மொழி பாதுகாக்கப்படும் வரலாறுகள் குறித்து பேசப்பட்டது,
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ரெக்ஸ், மற்றும் நிர்வாகி பேட்டரி ராஜ்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை எழ தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் சிவசக்தி கணேசன் ஒருங்கிணைத்தார்.