திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் புதிய வாகனங்களின் விலை ஏற்றம் உதிரி பாகங்கள் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றம் காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அரசு குறைக்க வேண்டும், மேலும் வாடகையை ஒன்றிணைந்து உயர்வு செய்திட வலியுறுத்தி 5 நாள் அடையாள வேலை நிறுத்தம் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் மாவட்டத் தலைவர் மஞ்சுநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளத்தின் மாநிலத் தலைவர் செல்வராசாமணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதேபோல் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள கொண்டையம்பேட்டை பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை, மணச்சநல்லூர், மணிகண்டம் உள்ளிட்ட 5இடங்களில் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் என்று அமைப்பு ஏற்படுத்தி இந்த அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- தற்போது வாகன விலைகள் சுமார் இரண்டு மடங்க அளவு உயர்த்தப் பட்டுள்ளது, எங்களது வாகனங்களுக்கு வருடம் ஒருமுறை வரி கட்ட வேண்டும் என்று தெரிவித்தனர் தற்பொழுது ஆயுட்கால வரி என்று கூறுகின்றனர். வருடம் ஒருமுறை நாங்கள் வரிகட்டும் பொழுது 10ஆயிரம் இருந்ததை ரூபாய் 12,500 என உயர்த்தினார்கள். இப்பொழுது ஆயுட்கால வரி என்று கூறி 15வருடத்திற்கு அதைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் அது சுமார் 3லட்ச ரூபாய் வருகிறது. இதன் காரணமாக எங்களது தொழில் நசிந்து வருகிறது. லாரிகளில் எங்களது எஸ்கலேட்டர் வாகனங்கள் கொண்டு செல்லும் பொழுது அதிகாரி தடுத்து நிறுத்தி அதற்காக ஜிஎஸ்டிபில், ஈவேபில் இருக்கிறதா என்றும் எங்கே போகிறது என்று திருட்டு வண்டியை கேட்பது போல கேள்வி கேட்கின்றனர். அந்தந்த மாவட்டங்களில் 25 கிலோ மீட்டர் உட்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பொழுது எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இப்பொழுது வாடகை தொடர்பாக தமிழகம் முழுவதும் அமைப்பை ஏற்படுத்தி பேசி வருகிறோம் தற்பொழுது 8மாவட்டங்களை சேர்ந்ததுடன் தற்பொழுது இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு தொடர்பான கோரிக்கை குறித்து 4வருடத்திற்கு முன்பாக அரசுக்கு மனு கொடுத்துள்ளோம். எங்களது முக்கிய கோரிக்கை திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளில் உள்ளூரில இருக்கும் எங்களுக்கு 80 சதவீத பணிகள் கொடுக்கப்பட வேண்டும்.  இதேபோல் ஜிஎஸ்டில் இருந்து எங்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வராசாமணி:- எங்களது கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு கொண்டு செல்ல வேண்டும் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து உள்ளூர் பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எக்ஸ்ரேட்டர் என்ற வாகனத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது அதற்கு ewayபில், ஜிஎஸ்டியும் கேட்கக் கூடாது. இல்லை நாட்டில் வாழ தகுதி இல்லை எனக் கூறி தமிழகத்தில் 5லட்சத்திற்கு மேற்பட்ட எக்ஸ்லேட்டர் வாகனம் இயங்கி வருகிறது அனைத்தையும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு காலவரையற்றை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இது தொடர்பாக துறை அமைச்சருக்கு மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. காத்திருக்கிறோம் நியாயம் கிடைக்கும் என்று இல்லை என்றால் தொடர்ந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *