கேரள மாநிலத்தின் எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் ஷான் எர்ணாகுளத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி வந்த கார் ஒன்று அவரை இடித்து தள்ளிவிட்டு அந்த காரில் இருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் அவரை சரமாரியாக 40 இடங்களுக்கு மேலாக வெட்டிக் தப்பிச் சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷான் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணியளவில் மரணம் அடைந்தார்.இந்த படுகொலையை கண்டித்து இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல்களும் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் தமிம் அன்சாரி, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா ஆகியோர் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினர்.
மாவட்ட செயலாளர் மதர் ஜமால் கண்டண உரையை தொகுக்கு உரையாற்றினார் மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத் நன்றியுரை நிகழ்த்தினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதின் கண்டன கோஷத்தை எழுப்பினார். இதில் அணி நிர்வாகிகளும், அனைத்து தொகுதி, கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெண்களும் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தனர்.