திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்பவர் தனது லக்கேஜில் 47 மலைப் பாம்புகள் மற்றும் இரண்டு ஊர்வன உயிரினங்களை டப்பாவில் அடைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் முகமது மொய்தீனிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். டப்பாவில் அடைத்து வைத்து எடுத்து வரப்பட்ட மலைப் பாம்புகள் மற்றும் ஊர்வன ஆகியவை எங்கு பிடிக்கப்பட்டது எந்த நாட்டைச் சேர்ந்தது என வனத்துறை அலுவலர்கள் மூலம் கண்டறிந்து அது உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த நபர் விசாரணைக்கு பின் முகமது மொய்தீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.