திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது
பயணி ஒருவர் தங்கத்தை பவுடர் வடிவில் அட்டைப்பெட்டியில் தூவி மறைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்தது இதனையடுத்து அந்தப்பயணியிடம் இருந்து ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 மதிப்புள்ள 176 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.