திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது
சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ.12 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 213 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.