காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகளை ஒரு ட்ராக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வித்தியாசமாக காமெடி காட்சிகளை மாற்றி மீண்டும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியை நினைவுக்கு கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய காமெடி காட்சிகள் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தாலும், பின்னர் மிகப்பெரிய ரீச் அடைந்தது.
குறுகிய காலத்திலேயே சந்தானம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். இளம் ஹீரோக்களின் படங்கள் எல்லாவற்றிலும் சந்தானம் இடம்பெற்றார். சந்தானத்தின் காமெடிக்காகவே வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. இப்படி அவர் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் பொழுது தான் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு படங்கள் வழக்கமான தன்னுடைய காமெடி பாணியில் நடித்தார். இந்த படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் வருகிற ஜூலை 28ஆம் தேதி நடிகர் சந்தானம் நடித்து வெளியாக உள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்பட ப்ரமோஷனுக்காக சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தார் அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.