சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது
பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில் ரூபாய் 47 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.