மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் மற்றும், டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் வருகின்ற 23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்:-. அதில் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி டாஸ்மாக் ஊழலை கண்டித்தும், அந்நிய மொழிகளை நேசிக்க கூடிய ஒரு கட்சியாகவும் நாட்டின் மொழியை விற்கக்கூடிய கட்சியாகவும் உள்ளது என்பதை தமிழக மக்கள் தற்போது உணர்ந்திருக்கின்றனர் இதன் காரணமாக இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக எல்லா தரப்பட்ட மக்களும் மாணவர்களும் கையெழுத்து இயக்கத்தை தானாக முன்வந்து கையப்பிடுகின்றனர். நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கோர் கலந்து கொள்ள உள்ளனர் இதில் பங்கேற்று எழுப்பக்கூடிய குரல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அகற்றக் கூடிய குரலாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, நைனார் நாகேந்திரன், வானதிசீனிவாசன் மற்றும் அமைச்சர் எல்.முருகானந்தம் ஆதியோர் பங்கு பெற்று உரையாற்ற உள்ளனர்.
போராட்டமாக இருந்தாலும் பொதுக்கூட்டமாக இருந்தாலும் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்துகின்றோம் திராவிட மாடல் என சொல்லக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் உடனடியாக தடை செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, வழக்கு பதிவு செய்வது என்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு கூட எங்களுடைய கருத்தை மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யக்கூடிய இந்த பொதுக்கூட்டத்திற்கு கூட காவல்துறை அனுமதி மறுத்தது. நாங்கள் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இந்த கூட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துகின்றது, ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது, கூட்டம் நடத்துகின்றது ஒரு நகராட்சியிலே, மாநகராட்சியிலே நடத்துகின்றார்கள் என்று சொன்னால் மாநகராட்சி முழுவதும் அவர்கள் அந்த போராட்டம் குறித்து விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் அந்த போராட்டத்தை நடத்துவதற்கும் எந்தவித தடையுமின்றி அனுமதி அளிக்கக்கூடிய காவல்துறையாக உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி நடத்தக்கூடிய போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து கொண்டு இருப்பது தொடர் நடவடிக்கையாக இருக்கின்றது. என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஒண்டிமுத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் இல.கண்ணன் ஆகிய உடன் இருந்தனர்.